என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாடகி சின்மயி
நீங்கள் தேடியது "பாடகி சின்மயி"
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த போவதாக பாடகி சின்மயி கூறியுள்ளார். #Chinmayi #RanjanGogoi
சென்னை:
தமிழ் சினிமாவில் பாடகியாகவும் டப்பிங் கலைஞராகவும் விளங்குபவர் சின்மயி.
பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் கொடுமைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்காக தொடங்கப்பட்ட மீடூ இயக்கத்தில் தமிழகத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளில் இருந்து மற்றவர்களுக்கு நிகழ்ந்த சம்பவங்களையும் வெளியே கூறினார்.
சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக உச்சநீதி மன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாருக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்தது.
இதன் அடிப்படையில், அந்தப் பெண்ணின் புகாரை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறைகளுக்கு சில வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இது குறித்து சின்மயி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
நான் கமிஷனர் அலுவலகத்தில் நுழைந்த உடனே அங்கு இருந்த பெண் காவலர் என்னிடம்,
‘சென்னையில் யாரும் இதுகுறித்து போராட்டம் நடத்த அனுமதி கேட்கவில்லையே?’ என்றுதான் கேட்டார்.
அவரிடம் நான் முதலில் தொடங்கினால் என்னுடன் போராடுவதற்கு பலர் தயாராக இருக்கிறார்கள் என்று கூறினேன். காவல்துறையினர் என்னிடம் போராட்டம் நடத்துவதற்கு வசதியான 5 தேதிகளையும் இடங்களையும் குறிப்பிட சொன்னார்கள்.
நான் வள்ளுவர் கோட்டத்தை குறிப்பிட்டுள்ளேன். நான் மீடூ இயக்கத்தில் புகார் கூறியதில் இருந்து இன்று வரை எனக்கு மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் வந்துகொண்டே தான் இருக்கின்றன. டப்பிங் யூனியனில் என்னை நீக்கியதற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளேன்.
என்னைப் போல பாதிக்கப்பட்ட பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்களும் துணிச்சலாக வெளியில் வந்து தங்களுக்கு நேர்ந்த அநீதிகளை கூறவேண்டும்’.இவ்வாறு அவர் கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு எதிரான சின்மயியின் போராட்டத்துக்கு சில பெண்கள் அமைப்பினரும் பெண் பத்திரிகையாளர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். #Chinmayi #RanjanGogoi

அந்தவகையில் சின்மயியும் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பெண் ஊழியர் கொடுத்த புகாரை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். போராட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
ரஞ்சன் கோகாய்
இது குறித்து சின்மயி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
நான் கமிஷனர் அலுவலகத்தில் நுழைந்த உடனே அங்கு இருந்த பெண் காவலர் என்னிடம்,
‘சென்னையில் யாரும் இதுகுறித்து போராட்டம் நடத்த அனுமதி கேட்கவில்லையே?’ என்றுதான் கேட்டார்.
அவரிடம் நான் முதலில் தொடங்கினால் என்னுடன் போராடுவதற்கு பலர் தயாராக இருக்கிறார்கள் என்று கூறினேன். காவல்துறையினர் என்னிடம் போராட்டம் நடத்துவதற்கு வசதியான 5 தேதிகளையும் இடங்களையும் குறிப்பிட சொன்னார்கள்.
நான் வள்ளுவர் கோட்டத்தை குறிப்பிட்டுள்ளேன். நான் மீடூ இயக்கத்தில் புகார் கூறியதில் இருந்து இன்று வரை எனக்கு மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் வந்துகொண்டே தான் இருக்கின்றன. டப்பிங் யூனியனில் என்னை நீக்கியதற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளேன்.
என்னைப் போல பாதிக்கப்பட்ட பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்களும் துணிச்சலாக வெளியில் வந்து தங்களுக்கு நேர்ந்த அநீதிகளை கூறவேண்டும்’.இவ்வாறு அவர் கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு எதிரான சின்மயியின் போராட்டத்துக்கு சில பெண்கள் அமைப்பினரும் பெண் பத்திரிகையாளர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். #Chinmayi #RanjanGogoi
மீடூ மூலம் வெளிச்சத்துக்கு வரும் நடிகைகளின் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிவித்துள்ளார். #MeToo #Vishal
சென்னை:
சமீபத்தில் இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து பாலியல் புகாரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.
அவருக்கு பெண்கள் அமைப்பு, பெண் எழுத்தாளர்கள், பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். தனுஸ்ரீ தத்தாவைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மேலும் பல பெண் பிரபலங்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை வெளியிட முன்வந்தனர்.
முதலில் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார்.
தென்னிந்தியாவில் முதல் முறையாக பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் செய்தார். சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா மற்றும் சுவிட்சர்லாந்தில் நடந்த இசை நிகழ்ச்சி என பல இடங்களில் தனக்கு வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்று தெரிவித்தார்.
இதேபோல் மேலும் பல பாடகிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சின்மயிக்கு நடிகைகள் சமந்தா, வரலட்சுமி, ஆன்ட்ரியா, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சித்தார்த் உள்பட பலர் ஆதரவு தெரிவித்தனர். நடிகர் கமல்ஹாசன், கனிமொழி எம்.பி. போன்றோரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து கருத்து வெளியிட்டனர்.
திரையுலகில் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களுக்கு என்ன தீர்வு காணப்போகிறீர்கள்? என்ற கேள்வியை பலரும் முன் வைத்தனர். பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறியிருக்கும் பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால், நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்படும்.
தமிழ் திரையுலகில் மீ டூ விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்கென்றே 3 பேரை கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.
ஜூனியர் கலைஞர்கள் முதல் மூத்த கலைஞர்கள் வரை புகார் செய்யலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். குழுவில் நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரது பிரதிநிதிகள் தலா ஒருவர் இடம் பெறுவார்கள்.
இவ்வாறு விஷால் கூறினார்.
ஏற்கனவே ‘மீ டூ’வில் வரும் பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி அறிவித்து இருந்தார்.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய 4 பேர் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று தெரிவித்து இருந்தார். தற்போது நடிகர் சங்கமும் குழு அமைக்க முடிவு செய்து இருப்பதன் மூலம் பாலியல் புகார்கள் விஸ்வரூபம் எடுக்கிறது.
ஏற்கனவே ஆந்திராவில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது ஒட்டு மொத்தமாக பாலியல் குற்றச்சாட்டு கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். சினிமா வாய்ப்பு தருவதாக கூறி நடிகர்கள், இயக்குனர்கள் பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்தி ஏமாற்றி விட்டார்கள் என்றார்.
அவர் ஐதராபாத்தில் அரைநிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #MeToo #Vishal
சமீபத்தில் இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து பாலியல் புகாரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.
அவருக்கு பெண்கள் அமைப்பு, பெண் எழுத்தாளர்கள், பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். தனுஸ்ரீ தத்தாவைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மேலும் பல பெண் பிரபலங்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை வெளியிட முன்வந்தனர்.
இதற்காக சமூக வலைதளத்தில் ‘மீ டூ’ ஹேஷ்டேக் தொடங்கப்பட்டது. அதில் பல பெண்கள் தெரிவித்த பாலியல் புகார்கள் வெளியிடப்பட்டன.
தென்னிந்தியாவில் முதல் முறையாக பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் செய்தார். சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா மற்றும் சுவிட்சர்லாந்தில் நடந்த இசை நிகழ்ச்சி என பல இடங்களில் தனக்கு வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்று தெரிவித்தார்.
இதேபோல் மேலும் பல பாடகிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சின்மயிக்கு நடிகைகள் சமந்தா, வரலட்சுமி, ஆன்ட்ரியா, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சித்தார்த் உள்பட பலர் ஆதரவு தெரிவித்தனர். நடிகர் கமல்ஹாசன், கனிமொழி எம்.பி. போன்றோரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து கருத்து வெளியிட்டனர்.
பாடகி சின்மயிக்கு ஆதரவாக திரைத்துறையினர் குரல் கொடுக்க வேண்டும், அவர்கள் மவுனமாக இருப்பது ஏன் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி நடிகர் சங்க பொதுச்செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷாலிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
தமிழ் திரையுலகில் மீ டூ விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்கென்றே 3 பேரை கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.
ஜூனியர் கலைஞர்கள் முதல் மூத்த கலைஞர்கள் வரை புகார் செய்யலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். குழுவில் நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரது பிரதிநிதிகள் தலா ஒருவர் இடம் பெறுவார்கள்.
இவ்வாறு விஷால் கூறினார்.
ஏற்கனவே ‘மீ டூ’வில் வரும் பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி அறிவித்து இருந்தார்.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய 4 பேர் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று தெரிவித்து இருந்தார். தற்போது நடிகர் சங்கமும் குழு அமைக்க முடிவு செய்து இருப்பதன் மூலம் பாலியல் புகார்கள் விஸ்வரூபம் எடுக்கிறது.
ஏற்கனவே ஆந்திராவில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது ஒட்டு மொத்தமாக பாலியல் குற்றச்சாட்டு கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். சினிமா வாய்ப்பு தருவதாக கூறி நடிகர்கள், இயக்குனர்கள் பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்தி ஏமாற்றி விட்டார்கள் என்றார்.
அவர் ஐதராபாத்தில் அரைநிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #MeToo #Vishal
×

X